• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

106 கேப்சூல்களை விழுங்கி போதைப்பொருள் கடத்திய பெண்...டெல்லி போலீசாரிடம் சிக்கினார்!

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 12:34 pm


டெல்லி விமான நிலையத்தில், 106 போதைப்பொருள் கேப்சூல்களை வயிற்றில் மறைத்து வைத்திருந்த பெண்ணை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த மே 14ம் தேதி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் அவரை சோதித்த போது, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் முழுமையாக சோதித்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது வயிற்றில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 'அயன்' படத்தில் வருவது போல் அவர் போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்துள்ளார். 

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சுமார் 930 கிராம் எடை கொண்ட மாத்திரைகளை வெளியே எடுத்துள்ளனர்.  106 மாத்திரைகள் அவரது வயிற்றில் இருந்துள்ளது. போலீசார் அவரை தற்போது கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில்,  ஆப்பிரிக்க போதைப்பொருள் கும்பல் ஒன்று அவரிடம் இந்த மாத்திரைகளை டெல்லியில் உள்ள தங்களது ஏஜென்டிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close