கர்நாடக அணையை வந்து பாருங்கள்: ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 01:28 pm

காவிரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்தை, கார்நாடகாவுக்கு வந்து அணைகளை பார்வையிட குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

கர்நாடகாவின் முதல்வராக 23ந் தேதி குமாரசாமி பதவியேற்க உள்ளார். இதனையொட்டி குமாரசாமி, தனது சகோதரர் ரேவண்ணாவுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். இதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள கோயில்களில் அவர் இன்று வழிபாடு நடத்தி வருகிறார்.

அவர் கோயிலில் வழிபட்டு விட்டு வெளியே வந்தபோது, செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்து குறித்து கேள்வி எழுபப்பட்டது. 

அதற்கு பதலளித்த அவர், ''நான் அவரை கர்நாடகாவில் உள்ள அணைகளை பார்வையிட அழைத்துள்ளேன்'' என்று கூறினார். 

முன்னதாக நேற்று நடந்த மக்கள் மன்ற மகளிர் அணி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய ரஜினி, ''காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது, புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி அதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்''.

இதுகுறித்து நேற்று ஶ்ரீரங்கத்தில் குமாரசாமியிடம் கேட்டபோது, காவிரி தண்ணீர் கேட்கும் முன் அவர் கர்நாடக அணைகளின் நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கே தண்ணீர் இல்லை. தமிழக விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. விரைவில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். கர்நாடக விவசாயிகளின் நிலைமையையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்வார்"  என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close