எதிர்கட்சி ஊர்வலத்திற்கு சென்றால் 'மஞ்சள் காமாலை' வரும்: மிரட்டிய அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 02:37 pm

எதிர்கட்சி ஊர்வலத்தில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை வரும் என்று உத்திரபிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த மது ஒழிப்பு ஊர்வலத்தில் சுஹெல்தேவ் பாரத் சமாஜ் கட்சியின் தலைவரும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பார் பேசும்போது, ''எங்கள் கட்சியின் ஊர்வலம் என்று வந்து கூப்பிட்டால் மட்டும் தான் அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். எதிர் கட்சிகளின் ஊர்வலத்தில் கலந்து கொண்டால் அவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்து விடும். அந்த நோய் சரியாக வேண்டும் என்றால் அதற்கும் நான் தான் மருந்தளிக்க வேண்டும்" என்றார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அம்மாநில முதல்வருடன் இவருக்கு ஏதோ முரண்பாடு இருப்பதாக கூறப்பட்டது. அது குறித்து பேசும் போது, ''யோகி எனது கேப்டன்'' என்று ராஜ்பர் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close