கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: முன்னாள் தேர்தல் ஆணையர்

Last Modified : 21 May, 2018 04:48 pm


முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும் என கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சிபுரிந்து வந்த காங்கிரஸ் கட்சி, 78 இடங்களை மட்டுமே பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 37 இடங்களை பெற்றது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சி புரிவதை தடுக்க, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி போட முடிவு செய்தன.

ஆளுநரை அக்கட்சிகள் அணுகியபோது, தனிப்பெரும் கட்சி என்ற பேரில், தனக்கு தான் ஆட்சியமைக்கும் உரிமை உள்ளது என கர்நாடக பா.ஜ.க  தலைவர் எடியூரப்பா ஆளுநரிடம் உரிமை கோரினர். ஆளுநரும், எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க அழைத்தார். ஆனால், எடியூரப்பா,பெரும்பான்மையை அடுத்த நாளே சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆதரவுடன், மஜத தலைவர் குமாரசாமி, நாளை முதல்வராக பதவியேற்கிறார். 

இந்நிலையில், கர்நாடக அரசியல் களம் குறித்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, "கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவது தான் சரி. ஜனாதிபதி ஆட்சி தான் ஒரே வழி என்று நான் சொல்லவில்லை. ஆனால், இதுபோன்ற குதிரை பேரம், பணப்பட்டுவாடா, ஓட்டுக்கு அமைச்சரவையை  விற்பது, போன்ற செயல்களை தடுத்திருக்கலாம்" என்றார். 3 மாதங்கள் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்து, அதன்பின்னும், எனத கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், சட்டசபையை கலைத்து புதிய தேர்தல் கொண்டு வர வேண்டும், என்றார்.

தேர்தலுக்கு பின், ஆட்சியமைக்கும் போது கட்சி மாறக் கூடாது, என்ற சட்டமும் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close