குப்பை பொறுக்கச் சென்ற இளைஞர் அடித்துக்கொலை - வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 04:55 pm


குஜராத்தில் குப்பை பொறுக்க சென்ற தலித் கூலி தொழிலாளி கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஷாபர் வெராவல் பகுதியில் தொழில்பேட்டை உள்ளது. அங்கு ராடியா இண்டஸ்ட்ரிஸ் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று தொழிற்சாலை அருகே சேர்ந்திருந்த குப்பைகளை 3 பேர் சுத்தம் செய்து வந்தனர். குப்பை அகற்ற முகேஷ்வேனியா (35) தனது மனைவி, அவர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் மேலும் ஒரு பெண்ணும் வந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் தொழிற்சாலையில் திருடுவதற்காக வந்துள்ளதாக சந்தேகம் கொண்டு தொழிற்சாலை உரிமையாளரிடம் காவலாளி முறையிட்டுள்ளார். மூன்றுபேரையும் பிடிக்க தொழிலாளர்கள் வந்துள்ளனர். இதில், முகேஷ் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெண்கள் இருவரையும் தப்பிக்க வைத்தார். முகேஷை தொழிற்சாலை வாசல் அருகே கட்டி வைத்து தொழிற்சாலை ஊழியர்கள் தாக்கினர். நாங்கள் குப்பை பொறுக்கதான் வந்தோம் என  அவர் கெஞ்சியுள்ளார். ஆனால் அவர்கள் தலித் என்பதால் அவர்களின் வாதம் எடுபடவில்லை. 


இந்த கொடூரமான தாக்குதலில் முகேஷ் படுகாயம் அடைந்தார். இதற்குள்ளாக தப்பிச் சென்ற அவர் மனைவி, தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துக்கொண்டு தொழிற்சாலைக்கு வந்தார். அங்கு, முகேஷ் நினைவிழந்து தரையில் சரிந்து கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்தவிட்டார் என்று கூறியுள்ளனர். முகேஷ்வேனியாவை கட்டிவைத்து தொழிற்சாலை ஊழியர்கள் கொடூரமாக அடிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ராடியா தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு, எஸ்.சி எஸ்.டி சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை, மூத்த காவல் துறை அதிகாரி விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குஜராத்தை சேர்ந்த தலித் இயக்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ மேவானி, குஜராத்தில் தலித் இளைஞர்களுக்கு பாதுகாப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close