கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 09:18 pm


கர்நாடகாவில் தேர்தல் முடிந்து, தேர்தலுக்கான வாக்குபதிவும் முடிந்து, அதற்கான முடிவுகளும் வந்த பின் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் மொத்தம் 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சியை வெல்வது யார் என ஜாம்பவன்களான காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதன்பின், மே 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், பாஜக 104 தொகுதிகளிலும், மஜத 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கமுடியாத காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆளுரை நாட ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். இதனிடையே காங்கிரஸ்- மஜத கட்சிகள் கூட்டணி அமைத்தது. பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தவிட்டத்தையடுத்து எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பதவி விலகினார். இதையடுத்து வரும் புதன்கிழமை மஜத- காங்கிரஸ்  கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, கர்நாடக மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து, பாஜகவிற்கு தான் ஓட்டு போட்டனர். எனவே கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அனைத்து உரிமையும் பாஜகவுக்கு உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை மீறவில்லை. ஆட்சியமைக்க தான் உரிமை கோரினோம். காங்கிரஸ்- மஜத கூட்டணி மக்களை ஏமாற்றும் செயல். கர்நாடகாவில் பாதிக்கும் மேற்பட்ட காங்கிரஸ் அமைச்சர்கள் தோல்வியடைந்தும், முதலமைச்சரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் உள்ளபோது காங்கிரஸ் எதை கொண்டாடுகிறது?  கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close