டாக்டர் பட்டம் வேண்டாம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Last Modified : 21 May, 2018 09:14 pm


இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பார்மர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது, அவருக்கு வழங்கப்பட இருந்த டாக்டர் பட்டத்தை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தின் நவுனியில் உள்ளது ஒய்.எஸ் பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம். இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

அப்போது அவருக்கு பல்கலை சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. ஆனால்,  தனக்கு டாக்டர் பட்டம் வேண்டாம் என கூறி அவர் மறுத்துள்ளார். "உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், என்னால் இதை பெற்றுக்கொள்ள முடியாது" என ஜனாதிபதி கூறியதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பட்டங்களை வழங்கியதோடு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, விவசாயத்துறையில் பல புதிய தொழில்களை துவக்க மாணவர்களை ஜனாதிபதி வலியுறுத்தினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close