பயப்பட வேண்டாம், நிபா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது: கேரளா

Last Modified : 21 May, 2018 10:19 pm


கேரளாவில் நிபா என்ற புதிய வைரஸ் தொற்றால், இதுவரை 9 பேர் இறந்திருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருவதற்கு இடையே, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மிகவும் ஆபத்தான வைரஸாக கருதப்படும் நிபா என்ற வைரஸ் தொற்றால், கோழிக்கூடு பகுதியில் பலர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 3 பேருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரின் ரத்த மாதிரிகள், நிபா வைரஸ் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் மேலும் பலர் இறந்துள்ள நிலையில், அதற்கான சரியான காரணம் தெரியாமல் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்த் பேசியபோது, "9 பேர் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேருக்கு நிபா வைரஸ் இருந்தது. மேலும் இறந்த 6 பேருக்கு நிபா வைரஸ் இருந்ததா என கண்டறிய புனே ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் வந்தபின் தான், உண்மையான பலி எண்ணையை தெரியும்" என கூறினார். 

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இதுகுறித்து பேசியபோது, "கோழிகோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கீழ் வரும் அனைத்து மருத்துவமனைகளிலும் நிபா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிய மருத்துவமனையை தேடி அலையை தேவையில்லை" என கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close