'தாக்குதலை நிறுத்துங்கள்" என கெஞ்சிய பாகிஸ்தான், தற்போது மீண்டும் அத்துமீறல்!

Last Modified : 22 May, 2018 04:46 am


ஜம்மு காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்தம் செய்ய இந்தியாவை கெஞ்சிய பாகிஸ்தான், நேற்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

காஷ்மீரின் ஆர்னியா பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இயல்பு நிலை திரும்பும் வரை, சுமார் 5 கிமீ பரப்பளவில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கோ, ராணுவ வீரர்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை. இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய ஷெல் குண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. குண்டுமழை பொழிந்த இந்திய ராணுவத்தின் பதிலடியால் கதிகலங்கிய பாகிஸ்தான், துப்பாக்கிச் சூட்டை நிறுத்த கோரிக்கை வைத்தது. தற்போது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close