சோனியா, ராகுலுடன் குமாரசாமி அமைச்சரவை விவாதம்...

Last Modified : 22 May, 2018 04:47 am


கர்நாடக முதல்வராக நாளை பதவியேற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். 

கர்நாடக தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை பெற்ற பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைத்துள்ளன. மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி, முதல்வராக பதவியேற்க இரு கட்சிகளும் ஒப்புகொண்டுள்ள நிலையில், நாளை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த குமாரசாமி, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். பல விவகாரங்கள் குறித்து குமாரசாமி அவர்களிடம் பேசியதாக தெரிகிறது. முக்கியமாக, ஆட்சியில் எத்தனை அமைச்சரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 

12 அமைச்சரவை, மற்றும் 2 துணை முதல்வர் பதவிகளை காங்கிரஸ் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு துணை முதல்வர்களில் ஒருவர் தலித் மற்றொருவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது குறித்து பேச்சுவார்தைகளுக்காக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். 

நாளை நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவிற்கு சோனியா மற்றும் ராகுலை அழைத்ததாகவும், இருவரும் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குமாரசாமி கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close