ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர்

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 08:08 am

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரீவா.

இவர் குஜராத் மாநிலம் ஜாம் நகரின் சாரு செக்‌ஷன் சாலையில் நேற்று காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்ற மோட்டார்பைக்கை கார் உரசியது. இதில் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள், ரீவாவின் தலைமுடியை கொத்தாக பற்றி தரதரவென வெளியே இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார்.  

இதைக் கண்ட பொது மக்கள்,  பலரும் ஓடிச் சென்று போலீஸ்காரரை மேலும் தாக்கவிடாமல் மடக்கிப் பிடித்து ரீவாவை மீட்டனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தாக்குதல் தொடுத்த கான்ஸ்டபிள் சஜய் ஆஹிரை கைது செய்துள்ளதாகவும், கருணையின்றி நடந்து கொண்ட அவர்  மீது மிகவும் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை எஸ்பி பிரதீப் செஜுள் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close