பா.ஜ.கவினர் என்னிடம் பேரம் பேசவில்லை: காங்கிரஸ் எம்.எல்.ஏ

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 09:12 am

பா.ஜ.காவினர் தனது மனைவியிடம் பேரம் பேசுவது போன்று வெளியான ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

கர்நாடக மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பெரும் குழப்பங்களுக்கு இடையே எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நாளை குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார். 

வாக்கெடுப்பு நடக்கவிருந்த அன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பா.ஜ.கவினர் பேரம் பேசியதாக பல ஆடியோக்களை அக்கட்சி  வெளியிட்டது. 

இதுவும் எடியூரப்பா ராஜினாமா செய்ததற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பர் நேற்று தனது பேஸ்புக்கில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும், தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்மனைவியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பா.ஜ.கவினர் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது. அதுபோன்ற எந்தவிதமான தொலைபேசி அழைப்புகளையும் என் மனைவி எதிர்கொள்ளவில்லை. அந்த ஆடியோ டேப்பில் உள்ள பெண்ணின் குரலும் என் மனைவி உடையது அல்ல. இதுபோன்ற ஆடியோ டேப்பை நான் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஹெப்பரின் இந்த பேஸ்புக் பதிவால் காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close