கர்நாடகா: துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவியை பெறும் காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 10:28 am


கர்நாடகாவில் துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி காங்கிரஸ்-க்கு வழங்குவது உறுதியாகியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், பா.ஜ.க ஆட்சி அமைப்பதை தடுக்கும் பொருட்டு காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி இணைந்துள்ளது. அதன்படி, கர்நாடகாவின் முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஒன்றுகூட உள்ளனர். 

நேற்று குமாரசாமி அமைச்சரவை விவாதம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். முதற்கட்டமாக  12 அமைச்சரவை, மற்றும் 2 துணை முதல்வர் பதவிகளை காங்கிரஸ் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தற்போதைய தகவலின் படி, கர்நாடகாவில் மொத்தமுள்ள 34 அமைச்சரவையில் காங்கிரஸ் 20 வரையிலான இடங்களையும், ம.ஜ.த 13 இடங்களையும் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.  இன்று கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயலாளர் வேணுகோபாலுடன் குமாரசாமி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். 

மேலும் துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவிகள் காங்கிரஸ்-க்கு கொடுப்பதும் உறுதியாகியுள்ளது. துணை முதல்வர் பதவிக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வரா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது துணை முதல்வராக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.பாட்டில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது துணை முதல்வர் பதவி கைவிடப்படும் சூழ்நிலையில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

கர்நாடகாவில் நாளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் மட்டுமே நாளை பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பதவியேற்பு எதுவும் நாளை நடைபெறாது. அமைச்சரவை விவாதம் முழுவதுமாக  முடிந்து, பிரிக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள் பதவியேற்பர் என கூறப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close