பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 03:10 pm

பல்கலைகழகத்தின் இணையதளத்தை முடக்கி ஒருவர் தன் காதலிக்கு பிறந்தநாள் வாழத்து கூறிய சம்பவம் நடந்துள்ளது. 

டெல்லியில் ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் இணையதளம் நள்ளிரவில் முடக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘ஹேப்பி பர்த்டே பூஜா’ என பிறந்த நாள் வாழ்த்துகள் தோன்றியது.

இந்த குறிப்புக்கு கீழ் இப்படிக்கு உன் காதலன் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பல்கலைக்கழக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்கலைகழகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் இணையதளத்தை முடக்கியது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து பல்கலைகழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

இந்த சம்பவம் இன்று காலைக்குள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. தற்போது சமூக வலைதளங்கயில் #HAPPYBIRTHDAYPOOJA டிரெண்டிங்கில் உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close