பாகிஸ்தான் அத்துமீறினால் சும்மா விடாதீர்கள்: உள்துறை அமைச்சர்

Last Modified : 22 May, 2018 04:49 pm


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கலாம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்திய ராணுவம், காஷ்மீர் மற்றும் அதன் எல்லை பகுதிகளில், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இந்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ரம்ஜான் மாதம் என்பதால், ராணுவத்தின் நடவடிக்கைகள், அமைதியான இஸ்லாமியர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என கூறியிருந்தது. 

ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் இரு தினங்களுக்கு முன் அத்துமீறலில் ஈடுபட்டதை தொடர்நது இந்திய ராணுவம் கடும் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்த இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான்  கோரிக்கை வைத்தது. ஆனால் மீண்டும் நேற்று பாகிஸ்தான் துப்பாக்கி மற்றும் ஷெல் குண்டு தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இன்று பாதுகாப்பு படையினரின் விழா ஒன்றில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "நமது அண்டை நாடு, தனது தவறுகளை திருத்திக் கொள்ள மறுக்கிறது. ஆனாலும், முதல் குண்டு நம்முடையதாக இருக்கக்கூடாது. அவர்கள் நம்மை தாக்கினால் பதிலுக்கு தாக்குதல் நடத்துவதா எனபதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close