ரம்ஜான் நோன்பை கைவிட்டு இந்து இளைஞருக்கு ரத்ததானம்

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 07:17 pm


முஸ்லிம் வாலிபர் ஒருவர் தனது ரம்ஜான் நோன்பை கலைத்து இந்து இளைஞரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தர்காசி பகுதியில் வசித்துவரும் அஜய்பிஜ்லாவன் என்பவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். டெஹ்ராடனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு, ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே இரத்தம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே அஜயின் ரத்தவகையை குறிப்பிட்டு உடனடியாக ரத்தம் தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்தியது.

இதையடுத்து, தகவல் அறிந்த ஆரிப்கான் என்ற முஸ்லிம் இளைஞர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு ரத்தம் கொடுக்க முன்வந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து ஆரிப்கானை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உணவு சாப்பிட்ட பின்னர்தான் ரத்தம் எடுக்க முடியும் என்று கூறிவிட்டனர். ரம்ஜான் நோன்பில் இருந்த ஆரிப்கான் ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தனது நோன்பை பாதியில் முடித்துக்கொண்டு  ரத்ததானம் செய்துள்ளார். உயிரை காப்பாற்ற ஆரிப்கான் செய்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close