"மகனை பார்த்துக்கொள்ளுங்கள்" நிபா வைரஸ் தாக்கிய நர்ஸ் எழுதிய உருக்கமான கடிதம்!

Last Modified : 22 May, 2018 05:52 pm


கேரளாவை உலுக்கி வரும் நிபா வைரஸ் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஒருவர், அந்த வைரஸ் பரவியதால் உயிரிழந்தார். அவர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் நோய் தாக்கியதில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். 3 செவிலியர்களை நிபா வைரஸ் தாக்கிய நிலையில், ஆரம்பத்தில் இந்த வைரஸ் தாக்கிய ஒருவருக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஓருவர் உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த 32 வயதான லினி புதுஸேரி என்ற அந்த செவிலியருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு. தான் இறக்கப்போவது தெரிந்தவுடன், கடைசி தருணங்களில் தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

"நான் இறந்துவிடுவேன் என நினைக்கிறேன். உங்களை பார்க்க முடியுமா என தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள். நம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்றும் தெரியாத நம் குழந்தைகளை கல்ப்பிற்கு அழைத்து செல்லுங்கள். அப்பாவை போல இங்கே தனியாக இருக்க வேண்டாம்.. அன்புடன்" என லினி எழுதிய கடிதத்தை, பல சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவருக்கு தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close