துப்பாக்கிச்சூடு அரசப் பயங்கரவாதம் - ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 09:05 pm


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு அரசப் பயங்கரவாததிற்கான எடுத்துக்காட்டு என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்களை தாக்கிய காவலர்களின் வெறிச்செயலால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்களின் செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ராகுல்காந்தி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் அரசப் பயங்கரவாதத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான உதாராணம். அநீதிக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக என்னுடைய அனுதாபமும் பிரார்த்தனையும்" என்று பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close