தூத்துக்குடியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: மம்தா

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 12:01 pm

தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகினார். இந்த சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், ''நான் இப்போது தான் பெங்களூரு வந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே நடந்த சம்பவம் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துக்கமான நேரத்தில் எனது எண்ணமும் பிரார்த்தனைகளும் தமிழ்நாட்டு மக்கள் பக்கம் இருக்கும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இவர் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூரு சென்றுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close