• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மோடியின் தோட்டாக்கள் தமிழ் மக்கள் உணர்வை நசுக்காது: ராகுல் காந்தி

Last Modified : 23 May, 2018 12:18 pm

மோடியின் தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வை நசுக்க முடியாது என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தூத்துக்குடியில் நடந்த போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 11 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நேற்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரசப் பயங்கரவாதத்திற்கு ஒரு மூர்க்கத்தனமான உதாராணம் என அவர் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ்  சித்தாந்தத்திற்கு அடிபணிய  மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும்  தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன்  இருக்கிறோம்'' என்று பதிவிட்டுள்ளார். 

Advertisement:
[X] Close