2வது முறையாக அரியணை ஏறுகிறார் குமாரசாமி!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 04:24 pm


கர்நாடக முதலமைச்சராக ம.ஜ.த கட்சி தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்றுக்கொள்கிறார். அவருடன் மற்ற அமைச்சர்கள், துணை முதல்வருக்கான  பதவிப்பிரமாணமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை எனவே காங்கிரஸ்- மஜத கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவுள்ளது. இதையடுத்து மஜத தலைவர் குமாரசாமி இன்று கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இவருடன் 32 அமைச்சர்கள், ஒரு துணை முதல்வர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதலமைச்சராக பதவியேற்கும் குமாரசாமி நாளை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனது பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்திருந்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சிதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.