24வது கர்நாடக முதலமைச்சரானார் குமாரசாமி!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 04:51 pm


கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக மஜத கட்சி தலைவர் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார்.

துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வர பதவியேற்றார். முதல்வர் மற்றும் துணை முதல்வரை அடுத்து  அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனது பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்திருந்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சிதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close