ரூ.80-ஐ கடந்து ரூ.85-ஐ நோக்கி செல்கிறது பெட்ரோல் விலை!

Last Modified : 23 May, 2018 06:03 pm


பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-ஐ கடந்துள்ளது. அதேபோல மும்பையில், ரூ.85-ஐ தொட்டுள்ளது.

தினம் பெட்ரோல் விலை மாறும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து பெட்ரோல் விலை கட்டுப்படுத்த முடியாத அளவு சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை தினம் உயர்வதை 9 நாட்களுக்கு மத்திய அரசு நிறுத்தியிருந்தது. கடந்த 14ம் தேதி மீண்டும், தினம் விலை மாறும் முறை கொண்டு வரப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, சுமார் 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை ரூ.2.50-க்கு மேல் உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ரூ.80.11; மும்பையில் ரூ.84.99 வரை பெட்ரோல் விலை சென்றுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசிய முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம், மத்திய அரசு மனது வைத்தால், பொதுமக்கள் நலன் கருதி ரூ.25 வரை பெட்ரோல் விலையை குறைக்க முடியும், என தெரிவித்துள்ளார். 

மும்பையை போலவே மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல் விலை விரைவில் ரூ.85 தொடும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close