ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 25ரூ வரை மத்திய அரசால் குறைக்க முடியும்: ப.சிதம்பரம்

  Sujatha   | Last Modified : 24 May, 2018 08:00 am


பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை மத்திய அரசால் குறைக்க முடியும் ஆனால் 1 அல்லது 2 ரூபாய் குறைத்து மக்களை மத்திய அரசு ஏமாற்றும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு 15ரூ சேமிக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் கூடுதலாக 10ரூ கலால் வரியினை மத்திய அரசு பெறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை அரசால் குறைக்க முடியும், ஆனால் மத்திய அரசு அதை செய்யாமல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2016 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் அரசு கலால் வரியை 9 முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close