உலகளவில் 6-ம் இடமும்; ஆசிய அளவில் 2 வது இடமும் பிடித்த தாஜ்மஹால்!

  Sujatha   | Last Modified : 24 May, 2018 07:21 am


உலகளவில் சுற்றுலா பயணியரை கவர்ந்த தலங்கள் பட்டியலில், தாஜ்மகாலுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள்  தொடர்பாக, டிரிப் அட்வைசர் எனும் தனியார் அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. இந்த ஆய்வில் மொத்தம் 68 நாடுகளில் உள்ள 759 முக்கியமான இடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், முதல் இடத்தை, கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோவில் பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை, ஸ்பெயினில் உள்ள, பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை, ஐக்கிய அரபு எமிரேட்சின், அபுதாபியில் உள்ள, ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், ஆறாவது இடத்தை, ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் பிடித்துள்ளது. 

மேலும், ஆசிய அளவில் வெளியான பட்டியலில் இரண்டாவது இடத்தை தாஜ்மகாலும், ஒன்பதாவது இடத்தை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், 10-வது இடத்தை பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close