• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

விராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 10:14 am

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் விடுத்த சவாலை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோடி. 

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் சில நாட்களுக்கு முன்பு அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு பிட்னஸ் சாவல் விடுத்தார். 

இந்த சவாலை ஏற்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் தான் மத்திய அமைச்சரின் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி ட்விட்டரில்  தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர உள்ளதாகவும் அந்த பதிவில் மோடி கூறியிருக்கிறார். 

Advertisement:
[X] Close