ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 04:02 pm


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெங்களூரு வேதாந்தா நிறுவனத்தின் முன் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டத்தினை போலீசார் தடுத்ததால், மோதல் மிகப்பெரிய கலவரமாக மாறியது. 

கடந்த இரண்டு நாட்களாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதைக்கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் தூத்துக்குடிக்கு கமாண்டோ படையினர் வரவழைக்கப்ட்டுள்ளனர். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெங்களூருவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், பெங்களுருவில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சில கன்னட அமைப்புகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close