கோலி சவால் இருக்கட்டும்....என் சவாலை ஏற்க முடியுமா?- பிரதமருக்கு ராகுல் ட்வீட்!

Last Modified : 24 May, 2018 04:18 pm

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் விடுத்த சவாலை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு சவாலை விடுத்துள்ளார்.

"அன்புள்ள பிரதமரே, விராட் கோலி ஃபிட்னஸ் சவாலை நீங்கள் ஏற்க தயார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னிடமும் ஒரு சவால் உள்ளது: எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் அல்லது, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி, உங்களை நிர்பந்தம் செய்து அதை செய்ய வைப்போம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் " என்று ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். 


விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் அதிகரித்து இருக்கும் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற பிரச்னையை குறிப்பிட்டு ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை சீண்டியுள்ளார். 

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் விடுத்த சவாலை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோடி. 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்தார். மேலும் தான் மத்திய அமைச்சரின் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

மேலும் கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடியும் ட்விட்டரில் உடனடியாக பதில் அளித்தார். அதோடு விரைவில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர உள்ளதாகவும் அந்த பதிவில் மோடி கூறியிருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close