மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்; சி.ஆர்.பி.எஃப் வீரர் பலி

Last Modified : 25 May, 2018 04:32 am


சத்திஸ்கரில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் ஒருவர் காயமடைந்தார். 

நேற்று காலை சத்திஸ்கரின் சுக்மா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் படையை சேர்ந்த கோப்ரா பட்டாலியன் பிரிவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென மாவோயிஸ்ட்கள் வைத்திருந்த ஐ.இ.டி எனப்படும் கைவினை குண்டு வெடித்தது. இதில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் பிந்த் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். காவலர் மாணிக் பின்ரி காயமடைந்தார்.

ராஜேஷ் குமாரின் உடல், ராய்ப்பூர் மருத்துவமனையில் உடற்கூறு செய்ய அனுப்பட்டுள்ளதாகவும், மாணிக் பின்ரி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சி.ஆர்.பி.எஃப்-ன் துணை ஆய்வாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close