நிபா வைரஸ் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு!

Last Modified : 25 May, 2018 04:31 am


கேரளாவை நடுங்க வைத்திருக்கும் நிபா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் தாக்கியதை தொடர்ந்து கோழிக்கூடில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூஸா என்பவர் நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே, இவரது இரண்டு மகன்களும் உறவினர் ஒருவரும் நிபா வைரஸால் பலியானது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸ் முதன்முதலாக தாக்கியவர்களில் மூஸா குடும்பத்தினரும் அடங்குவர். 

கோழிக்கூடு பகுதியே இந்த வைரஸ் பரவலால் பதற்றத்தில் உள்ள நிலையில்,  மருத்துவமனைகளில் தற்போது நிபா சோதனைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 160 ரத்த மாதிரிகளை புனே மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை கூறியது. 22 மாதிரிகள் பரிசோதனை முடிந்து திருப்பி வந்ததாகவும், அதில் 14 பேருக்கு நிபா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கோழிக்கூடு மருத்துவமனையில் 136 பேர் மற்றும் அருகே உள்ள மலப்புரம் மருத்துவமனையில் 36 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close