சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 08:13 am

கா்நாடகா முதல்வா் குமாரசாமி அம்மாநில சட்டசபையில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளாா். 

கா்நாடகாவில் கடந்த 12ந்தேதி நடைபெற்ற சட்டசபை தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் ம.த.ஜ கட்சிகள் கூட்டணி அமைத்து  தங்களிடம் பெரும்பான்மை உள்ளதால் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அளித்தனர்.  

இருப்பினும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அம்மாநில ஆளுநா் வஜூபாய் வாலா 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.வின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தாா். அதன் அடிப்படையில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றாா். மேலும் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. 

இதனை எதிா்த்து ம.ஜ.த, காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தன. இறுதியில் எடியூரப்பா 24 மணி நேரத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று தொடா்ந்து தொிவித்து வந்த எடியூரப்பா இறுதியில், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு கோராமலேயே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தாா். 

இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ம.ஜ.த மாநிலத் தலைவா் எச்.டி.குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா். காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் வெள்ளிக்கிழமை தனது பெரும்பான்மையை நான் நிரூபிப்பேன் என்று குமாரசாமி தொிவித்தாா். 

அதன் அடிப்படையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்று பகல் 12.15 மணிக்கு தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா தலைமையில் சட்டசபை கூடவுள்ளது. முதலாவதாக பேரவைத் தலைவருக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி சாா்பில் ரமேஷ்குமாா், பா.ஜ.க. சாா்பில் சுரேஷ்குமாா் போட்டியிடுகின்றனா்.

இதனைத் தொடா்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீா்மானத்தை குமாரசாமி கொண்டுவருவாா். தீா்மானம் மீது ஆளும் கட்சி, எதிா்க்கட்சித் தலைவா்கள் பேசுவா். பின்னா் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close