துப்பாக்கிச்சூடு சம்பவம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 11:20 am


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிசூட்டை கண்டித்தும்,  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றும் சென்னையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுஸ் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஜி.எஸ்.மணியன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், வரும் திங்கட்கிழமை(மே.28) மீண்டும் முறையிடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close