5 வருடம் குமாரசாமி முதல்வராக இருப்பாரா? - காங்கிரசின் பதில்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 02:33 pm

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடகா துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் 68 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பரமேஸ்வராவிடம், குமாரசாமி முதல்வராக 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும்  முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

மேலும், அமைச்சரவையில் எந்த கட்சிக்கு எந்த துறைகளை பகிர்ந்தளிப்பது என்பது குறித்தும், முதல்வராக குமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு அளிப்பதா அல்லது காங்கிரஸ் கட்சியும் அப்பதவியை பகிர்வதா என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் நடைபெறவில்லை என்றும் பரமேஸ்வரா கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close