புத்தகயா குண்டுவெடிப்பு: 5 பேரும் குற்றவாளிகள் என பாட்னா நீதிமன்றம் தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 03:46 pm


2013 புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என பாட்னா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைப்பெற்றது. புத்தகயா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 10 குண்டுகள் வெடிக்கப்பட்டன. இது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக உணரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் சிலர் காயங்களுடன் தப்பினர். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு பீகார் மாநிலம் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஹைதர் அலி என்பவன் தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளான். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close