ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 10:24 pm


ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மத்திய சுற்றுசூழல் துறை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ம் தேதி தொடங்கிய மாபெரும் போராட்டம் கலவரமாக மாறியது. வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்,  2 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். காயமடைந்த பலரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆலைக்கு எப்போது அனுமதி வழங்கப்பட்டது? எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து முழுமையாக ஆய்வு முடிந்த பிறகு நான் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்" என தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close