நாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 09:32 pm


இந்தியாவில் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதற்கிடையே தேர்வு முடியும் கடைசி நேரத்தில் 12ம் வகுப்பிற்கான பொருளாதார படத்தின் தேர்வுத்தாள், தேர்வு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதையடுத்து இதற்கான மறுதேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என  சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மாணவ, மாணவியர்கள் cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close