ஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா?

Last Modified : 25 May, 2018 11:07 pm


இந்திய ராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஹோட்டலில் தகராறு செய்த சம்பவத்தை தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மேஜர் லீதுல் கோகோய் தங்கியிருந்தார். அப்போது, அவரை சந்திக்க ஒரு பெண்ணுடன் ஒருவர் வந்திருந்தார். ஆனால், இருவரையும் ஹோட்டல் நிர்வாகம், ராணுவ மேஜரை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, இருவரும் ஹோட்டல் நிர்வாகத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மேஜர் கோகோய் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணை போலீசார் விசாரித்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுகுறித்து ராணுவ தளபதி ஜெனரல் ராவத் பேசினார். ராணுவ விதிகளை மீறியிருந்தால், கோகோய் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். 

முன்னதாக,  காஷ்மீரில் ராணுவத்தினர் மீது இளைஞர்கள் கற்களை எரிந்ததை தொடர்ந்து, அவர்களில் ஒருவரை கைது செய்து, தன் வாகனத்தின் முன் கட்டி வைத்து சென்றார் கோகோய். அன்று அவரின் செயல் ஊடகங்களிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஆனால், அவருக்கு ராணுவம் விருது வழங்கி மேலும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close