சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

  Sujatha   | Last Modified : 26 May, 2018 06:57 am


சி.பி.எஸ்.இ பாட திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. முறையில் பயின்ற  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெற்றது.  11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு Economics தேர்வு ஏப்ரல் 25-ம் நாள் மீண்டும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என CBSE நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close