அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் போலீஸ்!!

  Sujatha   | Last Modified : 26 May, 2018 08:50 amமகாராஷ்டிராவை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியுள்ளார். 

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் போலீஸ்  லலிதா சால்வே(29). இவர்  கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் பாலின அறுவை சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபின் நேற்று முதல் கட்ட அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரஜத் கபூர் கூறுகையில், ‘முதல் கட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அடுத்த கட்ட அறுவை சிகிச்சை 6 மாதங்களுக்குப்பின் நடைபெறும்’ என தெரிவித்தார்.

தற்போது 'லலித் குமார்'  என தனது பெயரை மாற்றிக்கொண்ட லலிதா சால்வே இது குறித்து கூறியதாவது:- நான் கடந்த 29 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்துவிட்டேன். கடைசியில் தற்போது நான் விடுதலை அடைந்துவிட்டேன். ஒரு புதிய வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் பீர் மாவட்டத்தில் 2010  ம் ஆண்டு பெண் போலீசாக பதவி ஏற்றவர் லலிதா சால்வே. இலக்கிய பட்டதாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு (2016) தனது உடம்பில் பாலின மாற்று அறிகுறிகள் உண்டாவதை கண்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது வரது உடலில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற விரும்பினார். இதற்காக ஒரு மாத காலம் மருத்துவ விடுமுறை கேட்டு கடந்த ஆண்டு அவர் போலீஸ் துறையில் விண்ணப்பித்தார்.

ஆனால் மாநில டி.ஜி.பி.அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார். இதனை ஏற்க மறுத்தலலிதா சால்வே இது குறித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, மராட்டிய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே முதல்வர்  தேவேந்திர பட்னாவிசை சந்தித்த லலிதா சால்வே, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவ விடுமுறை வழங்குமாறும், அதன்பிறகு ஆண் போலீசாக பணியாற்ற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். முதலில் தயக்கம் காட்டிய முதல்வர், பின்னர் நீண்ட பரிசீலனைக்கு பிறகு அந்த பெண் போலீசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.     

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close