2019லும் பாஜக ஆட்சி தான்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

  Padmapriya   | Last Modified : 26 May, 2018 12:28 pm

மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைவதையே மக்கள் விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

பா.ஜ.க ஆட்சி அமைந்து 4 வருடங்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார். 

மேலும் அதில் அவர் கூறும்போது, "மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் பல சாதனைகள் செய்துள்ளோம். மோடி முன்னேற்றத்தை முன் வைத்தே ஆட்சி செய்து வருகிறார். உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதுவே பெரிய சாதனை. நடப்பு பற்றாக்குறை கணக்கு சரியான நிலையில் இருக்கிறது. இந்தியாவில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. 

உலகின் முதல் 5 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா விரைவில் இடம்பிடிக்கும் என்று நம்பலாம். பொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப்பெரிய சாதனை . நிதிப்பற்றாக்குறையை மத்திய அரசு குறைத்துள்ளது. உலகில் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை செயல்படுத்த உத்தேசித்து வருகிறோம். 

அடுத்த தேர்தலிலும் மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைவதையே மக்கள் விரும்புகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும், அது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்காது. வரும் 2019 தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.  காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் முடிவுக்கு வர வேண்டும். ஹூரியத் அமைப்புடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close