சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 01:51 pm


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுதும் 11.86 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், நாடு முழுவதும் 83.01% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அவர்களில் 88.31% மாணவிகளும், 78.99% மாணவர்களும் ஆவர். 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.32% தேர்ச்சியை பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. 

இத்தேர்வில் காஸியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாவதாக சென்னை மண்டலத்தில் 93.87% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மூன்றாவதாக டெல்லி மண்டலத்தில் 89% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

http://www.cbse.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close