காஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 07:39 pm


காஷ்மீர் எல்லையில் இன்று நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று காலை குப்வாரா மாவட்டத்தின் தாங்தார் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றனர். இதையறிந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

முன்னதாக ரம்ஜான் பண்டிகையையொட்டி, தாக்குதல் எதுவும் நடத்தக்கூடாது என காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியிருந்தார். அதையும் மீறி பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.