மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்

  Sujatha   | Last Modified : 27 May, 2018 07:36 am


பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு ஆட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசின் 'ரிப்போர்ட் கார்டு'யை  வெளியிட்டுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்து நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதனை பாஜகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மோடியின் நான்கு ஆண்டு சாதனைகளின் அடிப்படையில், அவர் ஒவ்வொரு துறையில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி ஆட்சியை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மார்க் (கிரேடு) போட்டு இருக்கிறார்.  


அந்த பதிவில்,  4 வருட ரிப்போர்ட் கார்ட் என கூறிப்பிட்டு, விவசாயம், வெளிநாட்டு கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு இதில் எல்லாம் ஃபெயில் என கூறியுள்ளார். அதேநேரம், கோஷங்களை உருவாக்குவது, சுய விளம்பரம் ஆகியவற்றில் இந்த அரசுக்கு ஏ பிளஸ் எனப்படும் உச்சபட்ச கிரேடை வழங்கியுள்ளார். யோகாவில் பி நெகட்டிவ் என கூறி கிண்டல் செய்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close