​அலகாபாத் சொல்லாதீங்க! பிரயாக்ராஜ்னு சொல்லுங்க...

  Sujatha   | Last Modified : 27 May, 2018 08:23 am


உத்தர பிரதேசத்தில் உள்ள, அலகாபாத் மாவட்டத்தின் பெயர்  'பிரயாக்ராஜ்' என்று மாற்றப்படவுள்ளது என்ற தகவலை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ள நிலையில் இது குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சுப்ரமணிய ஸ்வாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடக்கும் கும்பமேளா அலகாபாத் நகரில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் உலகப் புகழ் பெற்ற ஒரு நிகழ்வாகும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர்.  கும்பமேளா நிகழ்விற்கான பணிகள் தற்போதே தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில், அலகாபாத் என்ற பெயரை, பிரயாக்ராஜ் என மாற்றுவது குறித்தும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த நகரம் பழங்காலத்தில் பிரயாக் என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால் அக்பர் காலத்தில் இந்த நகரம் இலாஹாபாத் என்றும், பின்னர் ஷாஜஹான் காலத்தில் 'அலகாபாத்' என்றும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இந்த நகரத்தை மீண்டும் பழைய பெயரில் அதாவது 'பிரயாக் ராஜ்' என்ற பெயரை மாற்றவுள்ளதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌர்யா அறிவித்துள்ளார். 

முன்னதாக, மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதும், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய ஸ்வாமி, 2014 ம் ஆண்டு மே 28 ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்: "அகமதாபாத் என்ற பெயரை கர்ணாவதி என்றும், ஒவ்ரங்கசிப் சாலையை தாரா ஷிகோவ் என்றும்,  அலகாபாத் என்ற பெயரை 'பிரயாக் என்று மாற்றுவதற்கு அரசுக்கு சுலபமாக இருக்கும் என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close