காதலன் கண்முன்னே இளம்பெண் பாலியல் பலாத்காரம்!!

  Sujatha   | Last Modified : 27 May, 2018 08:49 am


கோவாவில், காதலனுடன் கடற்கரைக்கு சென்ற இளம்பெண்ணை கத்திமுனையில் மிரட்டி 3 பேர் சேர்ந்த கும்பல் பலாத்காரம்  செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு கோவாவில் உள்ள செர்னாபடிம் கடற்கரையில்  20 வயது இளம்பெண் தனது காதலருடன்  பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் கத்தி முனையில் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் அத்திரமடைந்த கும்பல் காதலன் கண் முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து காதல் ஜோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக சஞ்சீவ் தனஞ்செய் பால் (23), ராம் சந்தோஷ் பரியா (19), விஷ்வாஸ் மக்ரானா (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது இளம்பெண்ணை கற்பழித்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close