தனது அரசு குறித்து கருத்துக் கேட்கிறார் மோடி

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 10:42 am

4 ஆண்டுகள் கடந்த பா.ஜ.க அரசு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 4 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் பலர்அந்த கட்சியை வாழ்த்தியும், பலர் கடிந்தும் வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆட்சிகுறித்து கருத்து தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவரது பதிவில், "மக்களின் குரல் எங்களுக்கு முக்கியம். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்தை என்னிடம் சொல்லுங்கள். அதன் படி பல முடிவுகளையும் முன்னேற்றங்களையும் நாங்கள் செய்வோம். இதனை நமோ ஆப் மூலம் நீங்கள் தெரிவிக்கலாம்'' என்று கூறியுள்ளார். 

மேலும் அந்த ஆப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு புகைப்பட விளக்கமும் அந்த பதிவோடு இணைத்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close