நேரு நினைவிடத்தில் ராகுல், பிரனாப் முகர்ஜி அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 11:37 am

ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று சாந்திவனத்தில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு 1964ல் மே 27ல் மறைந்தார். அவரது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

இதனையொட்டி, இன்று டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.

மேலும் பிரதமர் மோடி உட்பட பலர் சமூக வலைதளத்தில் நேருவை நினைவு கூர்ந்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close