ஸ்மார்ட் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 11:48 am


நாட்டின் முதல் ஸ்மார்ட் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை, ரூ.11,000 கோடி செலவில் ஸ்மார்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை வழிச் சாலையாகும்.

மொத்தம் 135 கி.மீ கொண்ட சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. 

வாகனங்களின் வேகத்தை கேமராக்கள் மூலம் கணக்கிட்டு, அதிவேக வாகனங்களுக்கு தானாக அபராத ரசீது வழங்கப்படுகிறது. மேலும் சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது. 

இந்த சாலை மூலம் டெல்லியில் 27% அளவிற்கு மாசுபாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி - மீரட் இடையேயான பயணம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து, 45 நிமிடங்களாக குறைகிறது. 

குறிப்பாக இமாச்சல் பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் செல்பவர்களும், ராஜஸ்தானில் இருந்து இமாச்சல் பிரதேசம் செல்பவர்களும் டெல்லிக்கு வராமலேயே செல்ல ஸ்மார்ட் நெடுஞ்சாலை உதவுகிறது. 

இந்த சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து அந்த சாலை வழியாக திறந்த வெளி ஜீப்பில் மோடி சென்றார். வழிநெடுக மக்கள் பிரதமரை பார்க்க குவிந்து இருந்தனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close