ஆந்திராவை கையில் எடுக்கிறார் முன்னாள் கேரள முதல்வர்!

Last Modified : 27 May, 2018 04:58 pm


முன்னாள் கேரள முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டியை, ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்துள்ளார் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை நீக்கி, அந்த இடத்திற்கு, முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் பொறுப்பாளராக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர பொறுப்பாளராக இருந்து வெளியேரும் திக்விஜய் சிங்கின் கடின உழைப்பை பாராட்டுகிறோம். அதேபோல மேற்கு வங்கம் மற்றும் அந்தமானின் பொறுப்பாளராக இருந்து பதவி இறங்கும், சி.பி ஜோஷியின் கடின உழைப்பையும் பாராட்டுகின்றோம்" என காங்கிரஸ் கட்சியின் அசோக் கேளாட் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close