குஜராத் மருத்துவமனையில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 08:32 pm


குஜராத் புஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சுமார் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் ஜி.கே. மருத்துவமனையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்து மே 20ம் தேதி வரை 111 குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவித்தள்ளது. குஜராத் ஆணையர் ஜெயந்தி ரவி இது குறித்து கூறுகையில், ‘கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட சத்து குறைபாடு, தாமதமாக மருத்தவமனைக்கு வருவது போன்ற காரணங்களால் குழந்தைகள் இறக்கின்றன. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதற்கு மேல் இறப்பு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்’ எனக் கூறினார்.

இதுகுறித்து அதானி தொண்டு நிறுவன கண்காணிப்பாளர் ராவ் கூறுகையில், தொலைவில் இருந்து மக்கள் வருவதால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எங்கள் ஊழியர்கள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இறப்புகளை குறைக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close